3.47 லட்சம் பைலட் எஸ்யூவி கார்களை திரும்பபெறுகிறது ஹோண்டா

அமெரிக்க சந்தையில் ஹோண்டாவின் பைலட் எஸ்யூவி கார்கள் பிரபலமான கார் மாடலாக திகழ்கிறது. அங்கு அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்று.
இந்த நிலையில், விபத்துக்களில் சிக்கும்போது பைலட் எஸ்யூவி கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் சீட் பெல்ட் தானாக அவிழ்ந்து கொள்வதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்தன. மேலும், விபத்துக்கள் நிகழும்போது சீட் பெல்ட் தானாக அவிழ்ந்துகொள்வதால், பயணிகளுக்கு அதிக காயங்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ஆய்வு செய்த ஹோண்டா, தொழில்நுட்ப பிரச்னை இருப்பதை கண்டறிந்தது. இதையடுத்து, சீட் பெல்ட் தானாக கழன்று கொள்வதை சரிசெய்து 3.47 லட்சம் பைலட் எஸ்யூவி கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 3.11 லட்சம் கார்களும், கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 10,000 கார்களும், மெக்ஸிகோவில் விற்பனை செய்யப்பட்ட 8,000 கார்கள் உள்பட சர்வதேச அளவில் 3.47 லட்சம் கார்களை திரும்பபெற இருப்பதாக ஹோண்டா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








