புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் காரை பார்வைக்கு வைக்கும் ஹோண்டா

Honda Concept EV
அதிக பிக்கப் மற்றும் கண்களை கவர்ந்திழுக்கும் வடிவமைப்பில் புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது ஹோண்டா.

பேட்டரி ஆற்றலை கொண்டு ஓடும் எலக்ட்ரிக் கார்கள் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி இருக்கிறது. பெர்ஃபார்மென்ஸ் இல்லாதது, நீண்ட தூரம் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காதது, அதிக விலை உள்ளிட்ட காரணங்களால் எலக்ட்ரிக் கார்களுக்கு மவுசு குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில், மக்கள் மத்தியில் உள்ள இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் புதிய கான்செப்ட் மாடல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை டோக்கியோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது ஹோண்டா.

எலக்ட்ரிக் காரா என்று நம்ப முடியாத அளவிற்கு வடிவமைப்பில் இந்த கார் அசத்துகிறது. இந்த புதிய எலக்ட்ரிக் கார் 2 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது. கூரையை மடக்கி விரித்துக்கொள்ளும் வசதிகொண்ட கன்வெர்ட்டிபிள் ரகத்தை சேர்ந்ததாக இருக்கும்.

எல்இடி விளக்குகள் இந்த காரின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. சுற்றுச்சூழலுக்கு பெரிதும் உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார் பெர்ஃபார்மென்சில் பின்னி எடுக்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது.

எலக்ட்ரிக் கார்கள் மீதான தற்போதைய கண்ணோட்டத்தை இந்த புதிய கார் முற்றிலும் மாற்றிவிடும் என்றும் ஹோண்டா தெரிவி்த்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 25, 2011, 14:59 [IST]
English summary
Honda has developed a striking new concept car that is not only visually splendid but also offers sporty performance. Further more it is eco-friendly too. The Honda Small Sports EV is a new two seater concept set to make its debut at the Tokyo Motor Show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+