ரூ.50,000 குறைவான விலையில் புதிய சிட்டி: கலக்கும் ஹோண்டா

New Honda City
மார்க்கெட் போட்டியை சமாளிக்க அதிரடியாக விலை குறைப்பு செய்து வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்து வருகிறது ஹோண்டா. கடந்த ஜூன் மாதம் சிட்டி விலையை ரூ.66,000 குறைத்த ஹோண்டா தற்போது புதிய சிட்டியை மேலும் ரூ.50,000 குறைவான விலையில் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டிதான் விற்பனையில் நம்பர் ஒன். ஆனால், கடந்த ஆண்டு மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வேகன் வென்ட்டோ உருவத்தில் ஹோண்டா சிட்டிக்கு சோதனை வந்தது.

விற்பனையில் முதலிடத்தில் இருந்த ஹோண்டா சிட்டியை பின்னுக்குத் தள்ளி வோக்ஸ்வேகன் முதலிடத்தை பிடித்தது. இதனால், ஹோண்டா அதிர்ந்து போனது என்னவோ உண்மைதான். தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த சிட்டி காருக்கு அத்துடன் சோதனை நிற்கவில்லை.

புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் ஹூண்டாய் அறிமுகப்படுத்திய ஆல் நியூ வெர்னா தனது புத்தம் புதிய வடிவமைப்பால் இரண்டாம் இடத்தில் இருந்த சிட்டியை மூன்றாம் இடத்துக்கு இழுத்து இறக்கி விடும் ஆபத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், மீண்டும் சிட்டியை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியை ஹோண்டா மேற்கொண்டது. இதற்கு ஒரே வழி விலை குறைப்பு என்ற அஸ்திரத்தை தவிர வேறு வழியில்லை என்பதை ஹோண்டா உணர்ந்து கொண்டது.

இதையடுத்து, சிட்டி காரின் விலையை ஒரே தடவையில் ரூ.66,000 வரை குறைத்து வாடிக்கையாளர்களை மீண்டும் தன் பக்கம் திரும்ப செய்தது. இதையடுத்து, மீண்டும் சிட்டியின் விற்பனை கணிசமாக அதிகரித்து இழந்த முதலிடத்தை மீண்டும் பிடித்தது.

இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதமாக வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதிய சிட்டி காரை நேற்று ஹோண்டா அறிமுகம் செய்தது.

இதில், வேடிக்கையான விஷயம் முந்தாநாள் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பழைய சிட்டி காரைவிட(ரூ.7.49 லட்சம் ஆரம்ப விலை) புதிய சிட்டி காரை ரூ.50,000 குறைவான விலையில்(ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலை) அறிமுகம் செய்து மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், கடந்த 5 மாதங்களில் சிட்டி காரின் விலை ரூ.1.06 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. பழைய சிட்டி காரை விட கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய சிட்டி காரை விலை குறைத்து ஹோண்டா அறிமுகப்படுத்தியது வாடிக்கையாளர்களை மட்டுமல்ல ஆட்டோத்துறையினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் சேகி இனபமா கூறியதாவது:

"மார்க்கெட்டில் நிலவும் போட்டியில் எங்களது தயாரிப்புகள் சிறந்ததாக இருக்கும் வகையில், கூடுதல் வசதிகளுடன் குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறோம். மேலும், புதிய சிட்டி காருக்கு வாடிக்கையாளர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு விலையை நிர்ணயித்தோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 15, 2011, 14:34 [IST]
English summary
Japanese car maker Honda striking the market with price cut mantra. The company has launched new city at Rs.6.99 lakhs. This is second time Honda has slashed the city price by Rs.50,000. In June, Honda has cut the city price Rs.66,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+