ஹோண்டா சியல் மார்க்கெட்டிங் பிரிவுக்கு புதிய இயக்குனர் நியமனம்

ஹோண்டா சியல் கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனராக டத்சுயா நட்சுமி பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவர் ஹோண்டா பிலிப்பைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஹோண்டா சியல் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவிற்கான புதிய இயக்குனராக சேகி இனாபா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 1ந் தேதி முதல் சேகி இனாபா முறைப்படி பதவி ஏற்க உள்ளார்.
இதுகுறித்து ஹோண்டா சியல் இந்தியா சி.இ.ஓ., தகாஷி நகாய் கூறுகையில்,"ஹோண்டா சியல் இந்தியா நிறுவனத்தின் ஒன்பது இயக்குனர்களில் ஒருவராக இனாபா செயல்படுவார். மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவை இனாபா கவனித்துக்கொள்வார்," என்று தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக சேகி இனாபா, ஹோண்டா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விற்பனை பிரிவு தலைவராக பணிபுரிந்து வந்த அவர் தற்போது ஹோண்டா சியல் இந்தியா நிறுவனத்தின் புதிய விற்பனைப் பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








