கார் விலையை 3% வரை உயர்த்தியது ஹோண்டா

Honda
டெல்லி: மூலப்பொருட்களின் விலை உயர்வையடு்த்து, வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கார் விலையை இரண்டு முதல் மூன்று சதவீதம் உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கார் தயாரிப்புக்கான உற்பத்தி செலவு பன்மடங்கு அதிகரித்தது. இதை தாக்கு பிடிக்க முடியாத கார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்தின.

இந்நிலையில், கார் தயாரிப்புக்கான கச்சாப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், கார்களின் விலையை 2 முதல் 3 சதவீதம் உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

சிட்டி, ஜாஸ், பிரிமியம் சிட்டி மற்றும் சிஆர்-வீ கார்கள் விலை உயர்வை சந்திக்கின்றன. அதேவேளை, பிரிமியம் சொகுசு காரான அக்கார்டின் விலையை ஹோண்டா உயர்த்தவில்லை. வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

மேலும், ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புகள் காரணமாக வரும் 17ந் தேதி நடைபெற இருந்த பிரையோ கார் அறிமுகத்தை ஹோண்டா ஒத்தி வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 15, 2011, 14:06 [IST]
English summary
Carmaker Honda Siel Cars India today said it will hike the prices of all its products, except luxury sedan Accord, by 2-3% with effect from April 1, on account of rising input costs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+