காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய ஹோண்டா சிட்டி

இந்திய மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி காருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தரம், அழகிய வடிவமைப்பு போன்ற காரணங்களால் சிட்டி கார் வாடிக்கையாளர் மனதில் நிரந்தர இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில், சந்தை போட்டி காரணமாக காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் கூடிய புதிய சிட்டி காரை ஹோண்டா தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது.
வெளிப்புறத்தில் பல புதிய மாற்ரங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய தோற்றத்துடன் கூடிய முன்பக்க கிரில், முன்பக்கம் மற்றும் பின்பக்க பம்பர்கள், புதிய வடிவமைப்பில் டேஞசர் விளக்குகள் ஆகிய சிட்டிக்கு புதிய பொலிவை கொடுக்கின்றன.
வரும் ஜனவரியில் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ ஷோவில் புதிய சிட்டியை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் நீக்கமற நிறைந்திருந்த சிட்டி காரின் விற்பனை திடீரென சரிந்ததையடுத்து, அதன் விலையை ரூ.66,000 வரை ஹோண்டா குறைத்தது. மேலும், பல சலுகைகளையும் அறிவித்தது.
இதனால், சிட்டி காரின் விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், புதுப்பொலிவுடன் வரும் சிட்டி கார் மூலம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என ஹோண்டா கருதுகிறது.


Click it and Unblock the Notifications








