முதல் கார் டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்தியது ஹோண்டா

தனது முதல் லைட் வெயிட் டீசல் எஞ்சினை ஹோண்டா நிறுவனம் வெளியுலக பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய டீசல் எஞ்சினை டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கிறது ஹோண்டா கார் நிறுவனம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் உலக அளவில் கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இந்திய மிட் சைஸ் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார்தான் நம்பர் ஒன்னாக உள்ளது.

இருப்பினும், அந்த நிறுவனம் வசம் டீசல் கார் மாடல்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால், மற்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அந்த நிறுவனத்தால் விற்பனை வளர்ச்சியை பெற முடியவில்லை.

இந்த நிலையில், தனது முதல் டீசல் எஞ்சினை மார்க்கெட்டுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது ஹோண்டா. இந்த புதிய எஞ்சின் விரைவில் துவங்கும் டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

ஐ-டிடெக் தொழில்நுட்பத்துடன் 1.6 லிட்டர் ரகத்தை சேர்ந்த இந்த புத்தம் புதிய எஞ்சின் 4,000 எஞ்சின் ஆர்பிஎம் சுழல்வேகத்தில் 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.2,000 ஆர்பிஎம் வேகத்தில் 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

மேலும், இந்த எஞ்சினின் சப்தம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும். இந்த புதிய எஞ்சின் 170 எடையை மட்டுமே கொண்டிருக்கும்.

இந்த புதிய எஞ்சின் முதன்முதலாக சிவிக் காரில் பொருத்தி வரும் ஆண்டு இறுதியிலோ அல்லது 2013ம் ஆண்டிலோ விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 1, 2011, 11:58 [IST]
English summary
Honda car company has unveiled of its first diesel engine in Japan. The brand new diesel engine will be displayed at Tokyo Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+