லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் புதிய ஹோண்டா சிஆர்வி அறிமுகம்

இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டிருந்த சிஆர்வி பிரிமியம் எஸ்யூவியை கடந்த 2007ம் ஆண்டு ஹோண்டா மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சிஆர்வி மார்க்கெட் போட்டி காரணமாக விற்பனை சரிய துவங்கியது.
இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய சிஆர்வியை ஹோண்டா மறு வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளுடன் மாற்றியுள்ளது. நான்காம் தலைமுறையாக வந்துள்ள இந்த புதிய 2012ம் ஆண்டு மாடல் சிஆர்வி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச கண்காட்சியில் ஹோண்டா பார்வைக்கு வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஜனவரி மாதம் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த கிராஸ் ஓவர் ரகத்தை சேர்ந்த இந்த புதிய சிஆர்வியை காட்சிக்கு வைக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
புதிய சிஆர்வி 2.4 லிட்டர் ஐவிடெக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 185 பிஎச்பி ஆற்றலையும், 163 எல்பி அடி டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய சிஆர்வி எஸ்யூவி 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த புதிய சிஆர்வி எஸ்யூவி பல புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ளது. நவீன தொழில்நுட்பம் கொண்ட மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே சிஸ்டம், பாண்டோரா இன்டர்நெட் ரேடியோ, எஸ்எம்எஸ் ரீடிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை புதிய சிஆர்வி கொண்டிருக்கும்.
புளூடூத் ஹேண்ட்ஸ் ப்ரீ லிங்க், குரூஸ் கன்ட்ரோல், ரிமோட் என்ட்ரி, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மோஷன் அடாப்டிவ் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் சங்ககமமாக வந்துள்ளது புதிய சிஆர்வி. அடுத்த ஆண்டு மார்க்கெட்டில் கால் பதிக்கும் இந்த புதிய சிஆர்வி நிச்சயம் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெறும் என்று ஹோண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








