பிரியோவுக்கு சீனாவிலிருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி: ஹோண்டா

கடந்த செப்டம்பரில் புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரான பிரியோவை ஹோண்டா அறிமுகப்படுத்தியது.மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்ற பிரியோ குறுகிய காலத்தில் 7,500 புக்கிங்குகளை பெற்றது.
இந்த நிலையில், தாய்லாந்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஹோண்டாவுக்கு உதிரிபாகங்கள் சப்ளை அடியோடு தடைபட்டுள்ளது. இதனால், சிட்டி, பிரியோ உள்ளிட்ட கார்களின் உற்பத்தியை ஹோண்டா முற்றிலும் நிறுத்தியுள்ளது.
தாய்லாந்தில் வெள்ள வடிந்தாலும், அங்குள்ள ஹோண்டா ஆலை கடுமையாக சேதமடைந்துள்ளது. அதனை சீரமைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் பிடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ஹோண்டா செய்வதறியாமல் கை பிசைந்து நிற்கிறது மேலும், இந்த நிலையில்,பிரியோ காருக்கு சீனா அல்லது ஜப்பானிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய ஹோண்டா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, ஹோண்டாவின் உற்பத்தி பிரிவு மற்றும் கொள்முதல் பிரிவு அதிகாரிகள் சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிலிருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி துவங்கப்பட்டாலும் அடுத்த மாத இறுதியில்தான் உற்பத்தி மீண்டும் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்த நிலையில், புக்கிங் செய்யப்பட்ட 7,500 கார்களில் 1,800 கார்களை மட்டுமே ஹோண்டா டெலிவிரி கொடுத்துள்ளது. உற்பத்தி துவங்கப்பட்டாலும் மீதமுள்ள புக்கிங் செய்ய்பபட்ட கார்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நிறைவடையும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








