ஹோண்டா சிட்டிக்கு ரூ.70,000 வரை நேரடி பணச்சலுகை

Honda City
ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.70,000 வரை டீலர்கள் நேரடி பணச்சலுகையை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் வெற்றி நடைப்போட்டு வரும் சிட்டி காரின் விலையை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஹோண்டா ரூ.66,000 திடீரென குறைத்தது. இதனால், அந்த காரின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், சிட்டி காருக்கு டீலர்கள் ரூ60,000 முதல் ரூ.70,000 காரின் விலையில் நேரடி பணச்சலுகையை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய சிட்டி காரை ஹோண்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனால், ஸ்டாக் உள்ள தற்போதைய சிட்டி கார்களை விற்று தீர்க்கவும், பண்டிகை காலத்தை முன்னிட்டும் இந்த சலுகையை வழங்குவதாகவும் ஹோண்டா டீலர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா சிட்டி கார் தற்போது 118 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் ஐவிடெக் எஞ்சினுடன் வருகிறது. மேலும், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், பிரிமியம் பியேஜ் இண்டீரியர், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆடியோ சிஸ்டம், டில்ட் ஸ்டீயரிங், கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது.

அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிகொண்ட டிரைவர் இருக்கை, முன்பக்கம் டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், இபிடி, பிரேக் அசிஸ்ட், சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர், இசியூ இம்மொபைலைசர் சிஸ்டம் உள்ளிட்ட சகல தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது ஹோண்டா சிட்டி.

சமீபத்திய விலை குறைப்புக்கு பின் சிட்டியின் பேஸ் மாடலான இஎம்டி-வேரியண்ட் ரூ.7.49 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 4, 2011, 15:25 [IST]
English summary
We will see soon facelift 2012 Honda City on Indian shores. Honda dealers offering huge discounts on existing Honda City sedan to clear stocks. Honda unveils the 2012 Honda City facelift in Thailand recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+