டொயோட்டோ கரோல்லா பெட்ரோல் மாடலுக்கு ரூ.50,000 சலுகை

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவி்ல் பெட்ரோல் கார்களுக்கான மவுசு வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், ஆண்டு இறுதி நெருங்குவதால் பொதுவாக கார் விற்பனை குறையும் என்பதால் பல்வேறு சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்குவது வழக்கம்.
இந்த நிலையில், டொயோட்டோ நிறுவனத்தின் டீலர்களில் கரோல்லா ஆல்டிஸ் பெட்ரோல் மாடலுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை சிறப்பு சலுகைகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் டொயோட்டோ கரோல்லா ஆல்டிஸ் கார் ரூ.10.8 லட்சம் முதல் ரூ.15.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை மூலம் கரோல்லா ஆல்டிஸ் விற்பனை அதிகரிக்கும் என்று டொயோட்டோ டீலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








