தொழிலாளர் வேலைநிறுத்த்தால் ஜெனரல் மோட்டார்சுக்கு பல கோடி இழப்பு

General Motors
ஹலோல்: தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத் மாநிலம், ஹலோலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், தொழிற்சாலையை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 85,000 கார்கள் தயாரிக்கும் திறன்கொண்ட இந்த தொழிற்சாலையில் தினமும் சராசரியாக 190 கார்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.ஆனால், தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் தினமும் 70 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை 600 கார்கள் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெனரல் மோட்டார்சுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தொழிற்சாலையில் ஒரு ஷிப்ட் மட்டும் கார் உற்பத்தி நடக்கிறது. விரைவில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, March 25, 2011, 10:51 [IST]
English summary
General Motors would not have anticipated such a setback in its Gujarat unit mooted by the employees who have been on strike for the second week. The strike has already incurred a loss of 100 units a day and the unit is not in a position to revive the normal production.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+