இயான் வந்தும் ஹூண்டாய் விற்பனை சரிவு

நாட்டின் கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அதேவேளை, ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம்தான் முதலிடம் வகிக்கிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை ஏழரை சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் 52,217 கார்களை விற்பனை செய்திருந்த ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 48,325 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
மேலும், கடந்த மாதம் ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய இயான் கார் 9,000 புக்கிங்குகளை பெற்றுள்ளது. இருப்பினும், மொத்த விற்பனையில் ஹூண்டாய்க்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப்பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா கூறுகையில்,"ஆண்டுதோறும் தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில் கார் விற்பனை கணிசமாக உயரும்.
அதேபோன்று இந்த ஆண்டும் அக்டோபரில் கார் விற்பனை அதிகரிக்கும் என்று கருதினோம். ஆனால், அந்த சென்டிமென்ட் இந்த ஆண்டு எடுபடாததால் ஏமாற்றம் அளித்துள்ளது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








