மாருதி ஸ்டரைக் எதிரொலி: ஹூண்டாய் கார்கள் புக்கிங் அமோகம்

Hyundai i10
தொழிலாளர் ஸ்ட்ரைக் காரணமாக மாருதி கார்களின் டெலிவிரியில் நிச்சயமற்றத்தன்மை நீடிப்பதால், ஹூண்டாய் கார்களுக்கான புக்கிங் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி ஆலை தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான மோதல் முற்றி வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் அந்த ஆலையை சேர்ந்த தொழிலாளர்கள் அவ்வப்போது நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களால் மாருதியின் கார் உற்பத்தியில் பெரும் இழப்பு ஏற்பட்டு்ள்ளது.

கடந்த வார நிலவரப்படி அந்த நிறுவனத்துக்கு 52,000 கார்களின் உற்பத்தியில் இழுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையி்ல், மாருதி கார்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

கார் டெலிவிரி கொடுப்பது பற்றி மாருதியும், டீலரும் உறுதியான தகவல்களை அளிக்க முடியாத நிலையில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் ஆசையை துறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கும் எப்போது முடிவுக்கு வரும் என்றும் தெரியவி்ல்லை.

நாட்டின் கார் விற்பனையில் பாதியளவுக்கு மாருதி கார்களே விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில்,பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மாருதி பக்கம் திரும்பாமல், தற்போது பிற நிறுவனங்களின் பக்கம் தங்களது கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

குறிப்பாக, கார் உற்பத்தியில் மாருதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு அதிக புக்கிங் நடந்து வருவதாக ஆட்டோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 19, 2011, 16:06 [IST]
English summary
Maruti Suzuki's tryst with strikes in the past three months have had a negative impact on India's leading carmaker. This has also helped Maruti's biggest competitor Hyundai to increase sales. Bookings at Maruti started to fall after the strike began at Manesar. The strike has helped Hyundai post an increase in bookings for the recently launched Eon small car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+