சென்னை டீலர்களில் ஹூண்டாய் 800 சிசி காருக்கு புக்கிங் துவக்கம்

Hyundai Eon
வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை தூண்டியுள்ள ஹூண்டாய் 800சிசி கார் வரும் அக்டோபர் 14ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையிலுள்ள டீலர்களில் இந்த புதிய காருக்கு புக்கிங் நடந்து வருகிறது.

குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட புதிய 800 சிசி காரை ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த புதிய கார் மாருதி-800 கார் இடத்தை எளிதாக பிடித்துவிடும் என்று ஆட்டோ சந்தை வட்டாரங்கள் பரபரத்து வருகின்றன.

அதிக மைலேஜ் கொடுக்கும் வகையிலான 814 சிசி எஞ்சினுடன் வரும் இந்த கார் டாடா நானோ மற்றும் மாருதி ஆல்ட்டோவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள ஹூண்டாய் டீலர்களில் இந்த காருக்கான புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை முன்பணம் பெற்றுக்கொண்டு டீலர்களில் புக்கிங் செய்யப்படுகிறது. ஆனால், நாளை முதல் டீலர்களில் அதிகாரப்பூர்வமாக புக்கிங் துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த காரின் விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், புதிய 800சிசி இயோனின் டாப் வேரியண்ட் மாடல் ரூ.3.50 லட்சம் விலையில் வரும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, September 30, 2011, 15:41 [IST]
English summary
Hyundai motors will be launched new 800cc Eon on october 14th. Hyundai Dealers already starting the bookings of Eon 800cc car in Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+