சிறிய கார்களை நடு நடுங்க வைக்கும் இயான்: இதுவரை 7,500 கார்கள் புக்கிங்

குறைந்த விலையில், அடுத்த தலைமுறைக்கான வடிவமைப்புடன் இயான் காரை கடந்த 13ந் தேதி ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது.
அதிகம் விற்பனையாகும் கார் மாடலான மாருதி ஆல்ட்டோவுக்கு நேரடி போட்டி கொடுக்கும் விலையில் இயான் அறிமுகம் செய்யப்பட்டதால் சிறிய கார் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாருதி ஸ்ட்ரைக் காரணமாக ஆல்ட்டோ உள்ளிட்ட கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்ட வேளையில் இயானை முன்கூட்டியே ஹூண்டாய் அறிமுகப்படுத்தியதால் கணிசமான புக்கிங்கை இயான் பெற்றுள்ளது.
இதுவரை 7,500 இயான் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் மாடல் இயான் மட்டுமே மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் எல்பிஜி அல்லது சிஎன்ஜி வேரியண்ட் இயான் காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதால் அந்த விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், டீசல் மாடல் இயான் அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் ஆல்ட்டோ விற்பனையில் இயான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








