ஹூண்டாய் இயோன் 800 சிசி கார்- சிறப்பு தகவல்கள்

Hyundai H800
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாயின் புதிய 800சிசி கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்த காரை பற்றிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகி உள்ளன.

3 சிலிண்டர்கள் கொண்ட 814 சிசி எஞ்சினுடன் இயோன் வருகிறது. டாடா நானோவுக்கும்(2 சிலிண்டர்கள் கொண்ட 624சிசி எஞ்சின்), மாருதி ஆல்ட்டோ கே-10 காருக்கும் (3 சிலிண்டர் 998சிசி எஞ்சின்)இடைப்பட்ட ரக எஞ்சின் கொண்டதாக இயோன் வருகிறது.

புதிய இயோன் காரின் எஞ்சின் 54 பிஎச்பி ஆற்றலையும், 76.5 என்எம் அதிகபட்ச டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மாருதி ஆல்ட்டோ கே-10 காரைவிட(லிட்டருக்கு 20.2 கிமீ மேலேஜ்) இயோன் அதிக மைலேஜ்(லிட்டருக்கு 21.1 கிமீ) கொடுக்கும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.

வெளிப்புற வடிவமைப்பில் மாருதி ஆல்ட்டோ கே-10 மாடலை ஒப்பிடும்போது நீளத்தில் மட்டும் 125மிமீ குறைவாக இருக்கும். ஆனால், அகலம் மற்றும் உயரத்தில் கூடுதல் டைமென்ஷன்களை இயோன் கொண்டிருக்கிறது. 3,495மிமீ நீளம், 1,625 மிமீ அகலம் மற்றும் 1,535 உயரம் கொண்டதாக இந்த கார் வர இருக்கிறது. இதனால், கேபினில் அதிக இடவசதியை இயோன் கொண்டிருக்கும்.

அதிக வீல் பேஸ் கொண்டதாக இயோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்களை தாராளமாக வைத்து எடுக்கும் வசதிகொண்ட 211 லிட்டர் டிக்கியை இயோன் பெற்றுள்ளது.

உட்புறத்தில் ஹைவெரியண்ட் மாடல்கள் போன்று அழகான டேஷ்போர்டு, சில்வர் கைப்பிடிகள், கறுப்பு மற்றும் பியேஜ் பிளாஸ்டிக்குகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. வெகுவாக கவரும் வகையில் மியூசிக் சிஸ்டம், யூஎஸ்பி/ஆக்ஸ் போர்ட் வசதி, பவர் ஸ்டீயரிங், முன்பக்கம் பவர் விண்டோஸ், டிரைவர் பக்கம் ஏர்பேக்குகள் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

அனைத்து அம்சங்களும் கொண்ட இந்த கார் பிற நிறுவனத்தின் சிறிய கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதத்தில் ரூ.3.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 27, 2011, 13:36 [IST]
English summary
Hyundai Eon 800cc car to hit market soon. The small car equipped with 814cc engine and it will give good mileage(21.2 ltr/km). The car have good boot room space compare with other models. It will expected starting price at Rs.3.2 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+