வேரியண்ட் வாரியாக இயோனின் சிறப்பம்சங்கள்: ஒரு பார்வை

இந்த புதிய காரில் வந்துள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்த விபரங்களை இங்கே பார்க்கலாம்.
இதில், சில ஸ்டாண்டர்டு ஆக்சஸசெரீஸ்களும், சிலவற்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளும் விதத்திலும் இருக்கின்றன. முதலில், பேஸ் வேரியண்ட்டான் டிலைட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை காணலாம். இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொதுவாக இருக்கின்றன.
பேஸ் வேரியண்ட் டிலைட்:
சைல்டு சேப்டி டோர் லாக், இம்மொபைலைசர், புல் சைஸ் ஸ்பேர் வீல்
காரின் உள்பக்கத்தில் ரியர் வியூ மிரர்(ஸ்டான்டர்டு), முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இஎல்ஆர் சீட் பெல்ட், ரியர் சென்ட்ரிக் சீட் பெல்ட்
பின்பக்கம் குரோம் பூச்சுடன் சின்னம், டெயில் மற்றும் பக்கவாட்டு இன்டிகேட்டர் லைட்டுகள், டியூவல் டோன் கலர் கொண்ட கிரில்
பியேஜ் மற்றும் பழுப்பு நிறம் கொண்ட கீ செட், பிவிசி கியர் நாப்
2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், செமி கிளாத் அப்ஹோல்ட்டரி, மோல்டிங் வைன்ட்ஷீல்டு
முன்பக்க கவுகளில் ஸ்பீக்கர் கிரில், முன்பக்கம் மற்றும் பின்பக்க இருக்கைகளில் தலைசாய்வதற்கான அட்ஜெஸ்ட் செய்யமுடியாத பிக்ஸ்டு ஹெட்ரெஸ்ட்
2 ஸ்பீடு வைப்பர் மற்றும் வாஷர்
முன்பக்க கன்சோலில் பவர் அவுட்புட்
பின்பக்க கதவுகளில் கைகளை வைத்துக்கொள்வதற்கான ஹேண்ட்ரெஸ்ட்
கியர் ஷிப்டு இன்டிகேட்டர்
ஸ்பீடோமீட்டர் கிளஸ்ட்டர்: ஸ்பீடோமீட்டர், டியூவல் ட்ரிப் மீட்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர், எரிபொருள் மானி, வாட்டர் பம்ப், ஆயில் ப்ரஷர், பார்க்கிங் பிரேக் இன்டிகேட்டர், பேட்டரி சார்ஜ், ஹைபீம், எஞ்சின் செக் லேம்ப், இம்மொபைலைசர் ஆகியவற்றுக்கான இன்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன.
இயோன் டிலைட்(ஓ):
இயோன் டிலைட்(ஓ) வேரியண்ட்டில் மேனுவல் ஏசி உள்ளது.
இயோன் எரா:
பாடி கலர் பம்பர், பாடி கலர் ப்ளஸ் குரோம் முன்பக்க கிரில்
மோட்டார் டிரைவன் பவர் ஸ்டீயரிங்
ஆல் ரவுண்டு டின்டட் கண்ணாடிகள், டின்டட் வைண்ட்ஷீல்டு, இபிஎஸ் இன்டிகேட்டர்
மிட்வேரியண்ட் இயோன் மேக்னா:
புல் வீல் கவர், கறுப்பு நிறத்தில் ஸ்டீல் வீல், டில்ட் ஸ்டீயரிங்
சென்ட்ரல் லாக்கிங், முன்பக்க கதவுகளில் பொருட்கள் வைப்பதற்கான பாக்கெட்டுகள்
ஸ்பீக்கர் கிரில், முன்பக்க பவர் விண்டோஸ், மைக்ரோ ரூப் ஆன்டென்னா, ப்ரண்ட் டோர் புல் சைஸ் ஆர்ம்ரெஸ்ட்
மிட்வேரியண்ட் இயோன் மேக்னா(ஓ)
சிடி ப்ளேயர், எம்பி-3 ப்ளேயர், எப்எம், ஏஎம் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட்கள், முன்பக்கத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள், ரியர் பார்சல் ட்ரே
டாப் வேரியண்ட் ஸ்போர்ட்ஸ்:
டிரைவர் சைடு ஏர்பேக், கீலெஸ் என்ட்ரி, முன்பக்கம் பனிவிளக்குகள் மற்றும் கிளியர் லென்ஸ்
பாடி கலர் கதவு கைப்பிடிகள், 3 ஸ்போக் அலுமினியத்தால் ஆன ஸ்டீயரிங் வீல்
கதவுகளின் உள்பக்கத்தில் மெட்டல் பினிஷ், ஏர்பேக் குறித்து எச்சரிக்கை செய்யும் இன்டிகேட்டர்


Click it and Unblock the Notifications








