இயோன் மூலம் மாருதி-800 இடத்தை பிடிக்க ஹூண்டாய் திட்டம்

Hyundai Eon
கடந்த 25 ஆண்டுகளாக இந்திய சந்தையில் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் மாருதி-800 கார் உற்பத்தி விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், புதிய மாருதி-800 காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், புதிய 800 சிசி காரை மாருதி அறிமுகப்படு்த்துதற்கு முன்பாகவே தனது புதிய 800 சிசி காரான இயோனை அறிமுகப்படுத்த ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மாருதி-800 கார் விட்டுச்செல்லும் மிக்பபெரிய வெற்றிடத்தை இயோன் மூலம் நிரப்பவும் ஹூண்டாய் திட்டம் போட்டு வைத்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் துணைத் தலைவர் ஆர்.சேதுராமன் கூறியதாவது," டாடா நானோ காருக்கும், மாருதி ஆல்ட்டோவுக்கும் இடையிலான வெற்றிடத்தை எங்களது புதிய 800சிசி கார் நிரப்பும். சந்தையில் புதிய 800 சிசி கார் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பது உறுதி. புதிய கார் பெட்ரோல் மற்றும் எல்பிஜி மாடலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இயோன் என்று பெயரில் ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ள இந்த கார் வரும் டிசம்பருக்குள் அறிமுகம் செய்யவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைவேரியண்ட் ஹேட்ச்பேக் கார்களில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளுடன் இந்த கார் வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2011, 15:15 [IST]
English summary
Hyundai Motors on Thursday said it is eyeing the slot vacated by rival Maruti Suzuki’s iconic model Maruti 800, which has been phased out. A new small car that will fill the slot “between the Tata Nano and the Maruti Alto” is set to be launched by Hyundai Motors India, its Vice-President R Sethuraman told reporters in Chennai on Thursday. The new model would hit the road by the end of the year, he added. Sethuraman further said the small cars from Hyundai would continue to be fuelled by petrol and LPG. The diesel versions would be available for higher-end cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+