5லட்சம் சான்ட்ரோ கார்களை ஏற்றுமதி செய்து ஹூண்டாய் சாதனை

கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சான்ட்ரோ,ஐ10, அக்சென்ட் உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் கார்களை தயாரித்து வருகிறது.இந்நிறுவனத்தின் சான்ட்ரோ மாடல் உலக அளவில் சிறந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சான்ட்ரோ கார் விற்பனையில் பல புதிய மைல் கற்களை எட்டி சாதனை படைத்துகிறது.அழகிய வடிவமைப்பு,சொகுசு,பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் சான்ட்ரோ கார் கடந்த 1999ம் ஆண்டு முதன்முதலாக நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து 80 நாடுகளுக்கு சான்ட்ரோ காரை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.இந்நிலையில்,ஏற்றுமதியில் 5லட்சத்தை கடந்து சான்ட்ரோ கார் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில்,"சான்ட்ரோ காரின் ஏற்றுமதி 5 லட்சத்தை கடந்துள்ள இந்த தருணம்,எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச தரத்திலான தயாரிப்புகள் மற்றும் சேவையை வழங்குவதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








