இரண்டு வாரங்களில் 8,500 வெர்னா புக்கிங்: திக்குமுக்காடும் ஹூண்டாய்

Fluidic Verna
சென்னை: சந்தைக்கு சமீபத்திய வரவான ஹூண்டாயின் புளூயிடிக் வெர்னா கார் புக்கிங்கில் அடித்து தூள் பரத்துகிறது. இதுவரை 8,500 வெர்னா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் ஹூண்டாய் புலகாங்கிதம் அடைந்துள்ளது.

சந்தையில் ஏற்கனவே அறிமுகப்படுத்த வெர்னா காரின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரவில்லை. இதனால், தனது பிரத்யேக புளூயிடிக் வடிவமைப்பு கொண்ட புதிய வெர்னாவை இந்திய சந்தையில் ஹூண்டாய் களமிறக்கியுள்ளது.

புதிய வெர்னாவை பார்த்தவுடனேயே, நிச்சயம் நாம் கொடுக்கும் பணத்துக்கு மதிப்புமிக்க காரை வாங்க போகிறோம் என்ற உணர்வை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி விடுகிறது. எனவே, இதற்காகவே காத்திருந்த வாடிக்கையாளர்கள் எதை பற்றியும் யோசிக்காமல் வெர்னாவை புக்கிங் செய்து வருகின்றனர்.

மேலும், இந்திய சந்தையின் தேவையை உணர்ந்து கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட நான்கு மாடல்களில் வெர்னா கிடைப்பதால், புக்கிங் சூடுபறக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 45,000 வெர்னா கார்களை விற்க திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக இருந்து வரும் ஹூண்டாய், சந்தையில் மற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் கடும் போட்டியை சந்தித்து வருகிறது. மேலும், விற்பனை வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் துவண்டு போயிருந்த ஹூண்டாய்க்கு புதிய வெர்னாவின் புக்கிங் புதுதெம்பை கொடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 27, 2011, 11:00 [IST]
English summary
New Fluidic Verna from Hyundai’s portfolio is sparkling bright on Indian roads and seems quite promising after crossing a terrific booking mark of 8,500, as per details revealed by Hyundai officials.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+