தமிழகத்தில் 2 புதிய சமூகநலத்திட்டங்களை துவங்கியது ஹூண்டாய்

கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தமிழகத்தில் தனது பவுண்டேஷன் சார்பில் பல்வேறு சமூகநல திட்டங்களை செயல்படு்த்தி வருகிறது.
இந்த நிலையில், இரண்டு புதிய சமூக நலத்திடங்களை தமிழகத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் பவுண்டேஷன் துவங்கியுள்ளது.
பசுமை புரட்சிக்கு வித்திடும் கோ கிரீன் திட்டத்தையும், சுகாதாரமான மாதிரி கிராமங்களை உருவாக்கும் வகையில் மற்றொரு திட்டமும் துவங்கப்பட்டுள்ளன.
இதற்காக, 5 கிராமங்களை ஹூண்டாய் பவுண்டேஷன் தத்தெடு்த்துள்ளது. அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஹூண்டாய் பவுண்டேஷன் செய்து கொடுக்க உள்ளது.
மேலும், கிராம மக்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஹூண்டாய் பவுண்டேஷன் தனது தன்னார்வ தொண்டர்கள் வாயிலாக மேற்கொள்ள உள்ளது.
இதேபோன்று, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக கோ கிரின் மூலம் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடும் திட்டம் விவசாயிகள் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக தென்கொரியாவிலிருந்து 120 தன்னார்வ தொண்டர்கள் கொண்ட ஏழாவது குழு தமிழகம் வந்துள்ளது.
இந்த இரு திட்டங்களின் துவக்க விழாவில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஹூண்டாய் பவுண்டேஷன் மூலம் ஏராளமான அரசு பள்ளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளுக்கு குடிநீர் வசதியை செய்து கொடுத்து வரும் ஹூண்டாய் பவுண்டேஷன், மாணவர்கள் அமர வசதியாக 450 பெஞ்ச்களையும் ஹூண்டாய் பவுண்டேஷன் சமீபத்தில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








