ஐ-10 டீசல் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் ஆயத்தம்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் டீசல் மாடலையும், டொயோட்டோ நிறுவனம் எட்டியோஸ் மற்றும் லிவா டீசல் மாடல்களையும் அடுத்தடுத்து களமிறக்கியுள்ளன.
இதனால், சிறிய கார் மார்க்கெட்டில் டீசல் மாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனமும் விரைவில் இணைகிறது.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான ஐ-10 காரின் டீசல் மாடலை ஹூண்டாய் விரைவில் களமிறக்கும் என எதிர்பார்க்க்பபடுகிறது.
ஏற்கனவே, ஐ-10 காரின் டீசல் மாடல் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டிலும் டீசல் ஐ-10 மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
1.1 லிட்டர் டர்போசார்ஜ்டு சிஆர்டிஐ எஞ்சினுடன் புதிய ஐ-10 டீசல் மாடல் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 75பிஎஸ் ஆற்றலையும், 153 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். ஏற்கனவே, மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதால் ஐ-10 டீசல் மாடலுக்கு வரவேற்பு அதிகமிருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏராளமான டீசல் கார்கள் மார்க்கெட்டில் அணிவகுத்து வருவதால், முன்கூட்டியே தனது ஐ-10 காரின் டீசல் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








