கார் இன்போடெயின்மெண்ட் தயாரிக்க இன்டெலுடன் ஹூண்டாய் ஒப்பந்தம்

கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனமான கியா ஆகியவை கார் விற்பனையில் நன்கு வளர்ந்து வரும் நிறுவனங்களாக மாறியுள்ளன.
மதிப்புடைய கார்களை தயாரிக்கும் பிராண்டாக தங்களை இரு நிறுவனங்களும் அடையாளம் காட்டிக்கொண்டுள்ளன. இதனால், கார் உற்பத்தியில் உலகின் 5வது பெரிய நிறுவனம் என்ற பெருமையை ஹூண்டாய் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கார்களில் பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்புக்கான இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெறுவது தவிர்க்க முடியாத அம்சமாகியுள்ளது. கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் முதலில் கேட்கும் விஷயங்களில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் இடம்பெறுகிறது.
எனவே, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை உருவாக்கும் வகையில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இன்டெல் நிறுவனத்துடன்ஹூண்டாயும், அதன் துணை நிறுவனமான கியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்போடெயின்மெண்ட் சாப்ட்வேர் மற்றும் அப்ளிகேஷன்களை இன்டெல் உருவாக்கி தரும். இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஹூண்டாய் மற்றும் கியா பிராண்டு கார்களில் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications