ஹூண்டாயின் 10 நாள் இலவச சர்வீஸ் முகாம் துவக்கம்

Hyundai
சென்னை: வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்கள் இலவச கார் சர்வீஸ் முகாமை துவக்கியுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

நாட்டின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளரான ஹூண்டாய், உள்நாட்டு விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது இலவச கார் சர்வீஸ் முகாம்களை ஹூண்டாய் நடத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் 14ந்தேதி வரை 10வது இலவச கார் சர்வீஸ் முகாமை துவக்கியுள்ளது ஹூண்டாய். நாடு முழுவதும் உள்ள 500 சர்வீஸ் சென்டர்களில் இந்த இலவச சர்வீஸ் முகாம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த முகாமில் காருக்கான முழு சர்வீசும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச சர்வீஸ் முகாமில் எஞ்சின், கியர் பாக்ஸ், எலக்ட்ரிகல் பிரச்சினை, ஏசி உள்ளிட்ட அனைத்துக்கும் சோதனை செய்யப்படுகிறது. இந்த சர்வீஸ் முகாமில் குறிப்பிட்ட உதிரிபாகங்களுக்கு 10 சதவீதம் கழிவு, லேபர் கட்டணத்தில் 20 சதவீத கழிவு மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த சர்வீஸ் முகாமுக்கு ஷெல் ஆயில் நிறுவனமும் ஸ்பான்சர் செய்கிறது. இந்த சர்வீஸ் முகாமில் ஷெல் ஆயில் வாங்கும் ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத கழிவு வழங்கப்படும் என்று ஷெல் தெரிவித்துள்ளது. மேலும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு ஹாங்காங் செல்வதற்கான வாய்ப்பையும் வழங்க உள்ளதாக ஷெல் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ஹூண்டாய் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்குகிறது. தவிர, பம்பர் பரிசாக 40 இஞ்ச் எல்சிடி டிவி வழங்கப்படும் என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனைப் பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா கேட்டுக்கொண்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 6, 2011, 16:09 [IST]
English summary
Hyundai Motor India (HMIL), the country's largest passenger car exporter and the second largest automobile manufacturer, in order to extend the advantage of its excellent services and free check-up to a larger number of customers, today announced its 10th nationwide Free Car Care Clinic.The Free Car Care Clinic will be held from 5th-14th March, 2011 and will be organized at over 500 Hyundai workshops across the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+