எல்பிஜியில் செல்லும் புதிய ஐ-10 மாடலை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்

Hyundai i10
ரூ.4.16 லட்சத்தில் எல்பிஜியில் செல்லும் புதிய ஐ-10 கார் மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கான புக்கிங் இன்று துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ-10 புளுடிரைவ் என்ற பெயரில் வந்துள்ள இந்த கார் எரா மற்றும் மேக்னா ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் எரா வேரியண்ட் ரூ.4.16 லட்சத்திலும், மேக்னா வேரியண்ட் ரூ.4.30 லட்சம் டெல்லி எஸ்க்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய எல்பிஜி ஐ-10 மாடலில் 1.1 லிட்டர் ஐஆர்டிஇ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேக்டரி பிட்டடு எல்பிஜி சிலிண்டரும், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் பொருத்தப்பட்டிருக்கிறது.

எரிபொருளை தேர்வு செய்வதற்கு டேஷ் போர்டில் உள்ள ஸ்விட்சை மாற்றினாலே போதுமானது. மற்ற எல்பிஜி சிலிண்டர் பொருத்தப்பட்ட கார்களை ஒப்பிடும்போது எல்பிஜி ஐ-10 மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் சிலிண்டர் மிகக்குறைந்த இடத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளதால் இடவசதி குறையை போக்குகிறது.

இந்த புதிய கார் அதிக மைலேஜ் கொடுக்கும் என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. பெட்ரோல் ஐ-10 காரைவிட எல்பிஜியில் செல்லும் ஐ-10 மாடல் ரூ.27,000 கூடுதல் விலை கொண்டதாக இருக்கிறது.

பெட்ரோல் விலை விண்ணை முட்டுவதால் எல்பிஜியில் செல்லும் ஐ-10 காரை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஐ-10 டீசல் காரை அறிமுகப்படுத்தும் திட்டமும் ஹூண்டாய் வசமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று புக்கிங் துவங்கப்பட்டுள்ள எல்பிஜி மாடல் ஐ-10 இன்னும் ஓரிரு வாரங்களில் டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 22, 2011, 16:52 [IST]
English summary
The Country's second largest car maker Hyundai motors had launched LPG cylinder fitted New i-10 model today. It is equipped with 1.1 liter irde engine and priced at Rs.4.16 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+