புதிய வெர்னாவை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்

இதன் அறிமுக விலை ரூ. 6.99 லட்சம் மற்றும் ரூ. 10.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெர்னாவை அறிமுகப்படுத்திய பின்னர் அதன் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பார்க் கூறுகையில், புதிய வெர்னா, அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கிறோம். நடுத்தர சைஸ் கார்களில் இது முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் நம்புகிறோம்.
தரம், வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய வெர்னா சிறந்து விளங்குகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என்ஜின்களைக் கொண்டதாக இந்த கார் உள்ளது என்றார்.
2006ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக வெர்னா அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








