ஐ-10,இயான் அபாரம்: ஹூண்டாய் கார் விற்பனை அதிகரிப்பு

Hyundai i10
கடந்த மாதம் ஐ-10 மற்றும் இயான் கார்களின் விற்பனை அதிகரித்ததால் ஹூண்டாய் மோட்டார்ஸ் கார் விற்பனை 28 சதவீதம் அதிகரித்தது.

கடந்த அக்டோபரில் ஹூண்டாய் கார் விற்பனை சரிவு கண்டது. இதனால், அந்த நிறுவனம் விற்பனை பெருக்க சலுகைகள் உள்ளிட்ட முயற்சிகளை எடுத்தது.

இதற்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது. கடந்த மாதம் ஹூண்டாய் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டது. கடந்த மாதம் ஹூண்டாய் 10,174 ஐ-10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட இயான் இடம்பெற்றுள்ளது. நவம்பரில் 7,418 இயான் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. தனது விற்பனையில் இயான் இரண்டாம் இடம் பிடித்துள்ள போதிலும் ஹூண்டாய் அதிருப்தி தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்த விற்பனை இலக்கை இயான் எட்டவில்லை என்று ஹூண்டாய் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலான சான்ட்ரோ விற்பனையை இயான் வெகுவாகவே பதம் பார்த்து விட்டது.

இருப்பினும், இயான் தாக்கத்தை சமாளித்து கடந்த மாதம் 5,122 கார்கள் என்ற கவுரமான இலக்கை சான்ட்ரோ கார் பெற்றது. இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஆல் நியூ வெர்னா விற்பனை 4,331 கார்கள் என்ற எண்ணிக்கையை எட்டியது.

கடந்த ஆண்டு நவம்பரை ஒப்பிடுகையில் உள்நாட்டு விற்பனை 10.97 சதவீதமும், ஏற்றுமதி 69.85 சதவீதமும் உயர்வு கண்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 6, 2011, 10:48 [IST]
English summary
Hyundai Motor India Limited has recorded a growth of 28.15 per cent in sales figures for November 2011 over the same period in 2010. Of these, domestic sales have grown by 10.97 per cent and exports by 69.85 per cent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+