ரூ. 400 கோடியில் இந்தியாவில் ஹுன்டாய் டீச்ல் என்ஜின் தொழிற்சாலை

Hyundai
மும்பை: ஹுன்டாய் மோட்டார் இந்தியாவில் சீராக வளர்ந்து வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் ரூ. 400 கோடி முதலீட்டில் டீசல் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருக்கிறது. அந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 1. 5 லட்சம் என்ஜின்கள் தயாரிக்கப்படும். சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்திய பிறகுதான் இந்த முடிவு எடுத்திருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்தார்.

இது குறி்த்து அவர் கூறியதாவது,

உள்ளூர் சந்தை பயன்பாட்டிற்காக புதிய தொழிற்சாலையில் 1.1 லி, 1. 4 லி மற்றும் 1.6 லி என 3 வகை என்ஜின்கள் தயாரிக்கப்படும். ரூ. 400 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் அந்த தொழிற்சாலையில் வரும் 2013 மற்றும் 2014ல் உற்பத்தி துவங்கும். புதிய என்ஜின்கள் ஏற்கனவே உள்ள சில மாடல்கள் தவிர்த்து புது மாடல் கார்களுக்கே பயன்படுத்தப்படும். ஹுன்டாய் வெர்னா மற்றும் ஐ10 கார்களில் உள்ள என்ஜின்கள் கொரியாவில் உள்ள ஹுன்டாய் தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கூடுதல் முதலீட்டில் இந்த ஆண்டு உற்பத்தியை 6. 3 லட்சத்தில் இருந்து 6.7 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மாடல்களும் அடக்கம் என்றார்.

இது குறி்த்து ஹூன்டாய் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவு தலைவர் கூறியதாவது,

கடந்த ஆண்டு 5. 6 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதன் அடிப்படையில் இந்த ஆண்டின் இலக்கு 6.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் அதிக கிராக்கி இருந்தது. 2011ல் உள்ளூர் சந்தையில் மட்டும் 4 லட்சம் கார்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஹுன்டாயின் புதிய தயாரிப்பான பார்க் 2011 அல்லது 2012-ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமாகலாம். இது சான்ட்ரோ போன்று 800 சிசி என்ஜின் கொண்டது என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 6, 2011, 17:49 [IST]
English summary
Hyundai is investing Rs. 400 crore to set a new diesel engine plant with a capacity of producing 1. 5 lakh units per year. Right now it is importing engines from its Korean plant for Verna and i10. The new 800cc car Park will be launched anytime in 2011 or in early 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+