விலையேற்றத்திற்கு முன் ஹூண்டாய் வழங்கும் அதிரடி சலுகைகள்

Hyundai i10
ஆண்டு இறுதி விற்பனையாக அனைத்து கார் மாடல்களுக்கும் ஹூண்டாய் அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதில், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஐ-10 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 சலுகையை அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை வெகுவாகவே குறைந்துள்ளது. மேலும், ஆண்டு கடைசியில் பொதுவாகவே கார் விற்பனை மந்தமாக இருக்கும். எனவே, ஆண்டு கடைசியில் விற்பனையை அதிகரிக்க கார் நிறுவனங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.

அந்த வகையில், ஆண்டு கடைசியையொட்டி ஹூண்டாய் நிறுவனம் அனைத்து கார் மாடல்களுக்கும் அதி்ரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகைகள் பெட்ரோல் மாடல்களுக்கு மட்டும் பொருந்தும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் வழங்கும் சலுகைகள் விபரம்.

இயானுக்கு ரூ.10,000 லாயல்டி போனஸ் சலுகை

புதிய புளூயிடிக் வெர்னா பெட்ரோல் மாடலுக்கு ரூ.15,000 தள்ளுபடி சலுகை

அக்ஸென்ட்டுக்கு ரூ.30,000 தள்ளுபடி

ஐ-10 காருக்கு ரூ.50,000 தள்ளுபடி

ஐ-20 காருக்கு ரூ.42,000 தள்ளுபடி

சான்ட்ரோவுக்கு ரூ.40,000 தள்ளுபடி

சொனாட்டோ பிரிமியம் செடான் காருக்கு ரூ.82,000 தள்ளுபடி

வரும் ஜனவரியிலிருந்து கார்களின் விலையை ஹூண்டாய் உயர்த்த இருப்பதால், வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் கார்களை வாங்க இதுவே சரியான தருணம் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 9, 2011, 14:47 [IST]
English summary
Hyundai Motors is offering discounts on its entire range of models built in India to boost its sales during the last month of the year. However the discounts are limited to Hyundai's petrol cars only. This underlies the reducing demand for petrol cars and the increasing demand for diesel cars. This discount also indicates Hyundai is struggling to sell its petrol cars well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+