கார்களுக்கு ஹூண்டாய் வழங்கும் அதிரடிச் சலுகைகள்

Hyundai offer
தீபாவளி பண்டிகையையொட்டி தனது கார்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்குகிறது.

தனது அதிகம் விற்பனையாகும் மாடலான சான்ட்ரோ ஸிங் காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.5,000க்கான கிப்ட் செக் மற்றும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனாசாக வழங்குவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ஐ-10 காருக்கு எக்ஸ்சேஞ்ச் லாயல்டி போனஸ் உள்பட காரின் விலையில் ரூ.30,000 வரை சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பண்டிகைகாலத்தையொட்டி ஐ-10 எரா 1.1 மாடல் கார் ரூ.3.49 லட்சம் விலையிலும், ஐ-10 மேக்னா 1.2 மாடல் ரூ.3.79 லட்சம் ஆரம்ப விலையிலும்(சலுகைகள் உள்பட)கிடைக்கும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, பிரிமியம் ஹேட்ச்பேக் ஐ-20 காருக்கு 200 லிட்டர் பெட்ரோலை இலவசமாகவும்(பெட்ரோல் மாடலுக்கு மட்டும்), ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குவதாகவும் தெரிவி்த்துள்ளது.

மேலும்,ஆக்ஸெனட் என்ட்ரி லெவல் செடான் காருக்கு ரூ.6,000க்கான கிப்ட் செக் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

சொனாட்டா பிரிமியம் செடான் காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் சலுகையையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்க்கண்ட இந்த சலுகைகள் அனைத்தும் வரும் 27ந் தேதி வரை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2011, 16:38 [IST]
English summary
Hyundai Motor Inida is offering huge discounts and freebies on their during this festive season to boost sales. Diwali which usually is a robust period for car sales has turned out to be rather dull. This has forced carmakers to offer cash discounts, free accessories and services. Here is the details of Hyundai Festive Offers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+