கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாமை துவங்கியது ஹூண்டாய்

80 பாயிண்ட் செக்கப்புடன் கார்களுக்கு 11வது இலவச சர்வீஸ் முகாமை துவங்கியுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்.

கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்குவதிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் விதத்தில் கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாமை ஹூண்டாய் மோட்டார்ஸ் நேற்று துவங்கியது.

நாடு முழுவதும் உள்ள 700 ஹூண்டாய் சர்வீஸ் சென்டர்களில் இந்த இலவச சர்வீஸ் சேவை வழங்கப்படுகிறது.

Hyundai i10
எஞ்சின், டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரிகல் சிஸ்டம், ஏசி உள்ளிட்டவற்றிற்கு 80 விதமான பரிசோதனைகள் இந்த சர்வீஸ் முகாமில் செய்யப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சர்வீஸ் முகாமில் கலந்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் போட்டி திட்டத்தையும் ஹூண்டாய் அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு 9 பேருக்கு ஐபாட் டச், 9 பேருக்கு ப்ளாக்பெர்ரி மொபைல்போன்கள், 9 பேருக்கு ஆப்பிள் ஐபாட் ஷஃபுள், 10 பேருக்கு நீடிக்கப்பட்ட வாரண்டி கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, பம்பர் பரிசாக ஐபேட் ஆகியவை பரிசாக வழங்கப்பட இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.மேலும், இந்த சர்வீஸ் முகாமுக்கு ஸ்பான்சர் செய்யும் ஷெல் நிறுவனம் உதிரிபாகங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது.

இந்த சர்வீஸ் முகாம் துவக்க விழாவில் பேசிய ஹூண்டாய் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் அர்விந்த் சக்சேனா கூறியதாவது:

"வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்கும் வகையில் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த சர்வீஸ் முகாமை துவங்கியுள்ளோம்.

விற்பனைக்கு பின்னும் வாடிக்கையாளர் நலனில் ஹூண்டாய் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. வழக்கம்போல் இந்த சர்வீஸ் முகாமும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 12, 2011, 15:19 [IST]
English summary
Hyundai Motor India launches its 11th nationwide Free Car service camp.This camp offer 80 point check up for hyundai cars. The company offers the camp from 11th to 20th of this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+