ஐ-30 ஹேட்ச்பேக் காரின் சிறப்பம்ங்கள்: ஹூண்டாய் வெளியிட்டது

Hyundai i30
இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் பிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐ-30 ஹேட்ச்பேக் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படங்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐ-10 மற்றும் ஐ-20 கார்கள் மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடல்களாக திகழ்கின்றன. இந்த வரிசையில், ஐ-30 மாடலை கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.

கடந்த ஆண்டு மட்டும் 1.15 லட்சம் ஐ-30 கார்கள் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையையும் ஐ-30 பெற்றுள்ளது.

இந்த நிலையில், அடுத்த தலைமுறை அம்சங்களுடன் கூடிய புதிய ஐ-30 காரை ஹூண்டாய் வடிவமைத்துள்ளது.

வரும் 13ந் தேதி பிராங்பர்ட் நகரில் துவங்க இருக்கும் பிரம்மாண்ட மோட்டார் ஷோவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அறுங்கோண வடிவம் கொண்ட முன்பக்க கிரில், ஆபரணம் போன்ற ஹேட்லைட்ஸ் வடிவமைப்பு, பகல்நேர ரன்னிங் விளக்குகள் உள்ளிட்ட புதிய மாற்றங்களுடன் ஐ-30 வருகிறது. இந்த கார் நிச்சயம் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் ஐ-10 மற்றும் ஐ-20 கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஐ-30 காரை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த கார் ரூ.7லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலை பட்டியலில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 10, 2011, 12:22 [IST]
English summary
South Korean auto major Hyundai Motor Company on Wednesday revealed the first picture of its new generation i30 hatchback, ahead of its unveiling at the Frankfurt Motor Show next week. In a statement, Hyundai said it expected the new generation i30 to build on the success of the original model and also the company’s first model to be launched with the prefix ‘i’. According to Hyundai, the original i30 was designed and engineered in Europe and rolled out of its factory in the Czech Republic in 2007. Last year, Hyundai sold 115,000 i30 units in Europe.“The new generation i30 is recognisable thanks to the Hyundai family face with its signature hexagonal-shaped front grille and the jewel-like design of the headlamps, together with distinctive daytime running lights.”
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+