அடுத்த ஆண்டு நேபாளத்தில் இயான் காரை அறிமுகம் செய்யும் ஹூண்டாய்

இந்திய சிறிய கார் மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இயான் கார் தற்போது சர்வதேச பயணத்தை துவங்க உள்ளது.
மாருதி ஆல்ட்டோவுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ள இயான் தற்போது நேபாளத்திலும் அந்த காருக்கு கடும் போட்டி கொடுக்க உள்ளது.
வரும் ஜனவரி முதல் இயான் காரை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
லக்ஷ்மி இன்டர்கான்டினென்டல் நிறுவனம் நேபாளத்தில் இயான் கார்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் பெற்ற டீலராக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்திய மார்க்கெட்டில் ரூ.2.69 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இயான் நேபாளத்தில் குறைந்த விலை காராக இருக்காது.
ஆம். நேபாளத்தில் காஸ்ட்லி யாத்திரையை இயான் துவங்க இருக்கிறது. இந்திய மதிப்பில் அங்கு ரூ.9 லட்சம் விலையில் இயான் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும், நேபாளத்தில் 3 பேஸ் வேரியண்ட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருப்பதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








