ரூ.2.5 லட்சத்தில் புதிய 800சிசி காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டம்

Hyndai Eon
வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய 800சிசி காரை வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த காரை ரூ.2.5 லட்சத்தில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா நானோ மற்றும் மாருதி ஆல்ட்டோ இடையிலான இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய 800சிசி காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. இயோன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் மிகக்குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானதால், அதன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் அதிகரித்து வருகிறது.

வரும் அக்டோபர் 10 ந்தேதி முதல் 15 ந்தேதிக்குள் இயோனை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் இந்த காரை ரூ.2.50 லட்சம் முதல் ரூ.2.60 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

குறைந்த விலையில் வரும் இந்த கார் ஆல்ட்டோ போன்று 3.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தாலும், உயரத்தில் 75 மிமீ, அகலத்தில் 40 மிமீ கூடுதலாகவும் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் டிசைன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், கேபின் அதிக இடவசதி கொண்டதாகவும், அதிக பொருட்கள் வைக்கும் லக்கேஜ் அறையுடனும் வர இருக்கிறது.

மேலும், இதில் பொருத்தப்பட்டிருக்கும் 815 சிசி எஞ்சின் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தரும் வகையிலும் இருக்கும் என்று ஹூண்டாய் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இயோன் மீதான வாடிக்கையாளர்களுக்கு மட்டமின்றி ஆட்டோத்துறையினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 19, 2011, 15:42 [IST]
English summary
Hyundai Motors India is all umber One car maker Maruti Suzuki and its top selling car Alto with its new small car Eon. According to a report in The Economic Times, Hyundai’s much-awaited entry-level small car Eon will enter the Indian roads between October 10 and 15, days ahead of Diwali at a starting price of Rs 2.50 lakh to Rs 2.60 lakh.The report quoted Arvind Saxena, Hyundai India sales & marketing director as saying "There is no car that is comparable with Eon. Yes, it is an entry-level car but with no compromise. It is a very spacious car with a large boot, something that you get only in bigger cars. And most importantly it doesn't compromise on style."
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+