இந்தியாவில் ஹூண்டாயின் கியா பிராண்டு கார் சோதனை ஓட்டம்

KIA Picanto
இந்தியாவின் வாகன விற்பனை துறையின் வளர்ச்சி பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்களை தன்பால் இழுத்து வருகிறது.

ஆனால், சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக மார்க்கெட் பங்களிப்பை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தங்களது துணை பிராண்டுகளையும் அடுத்தடுத்து இந்தியாவில் களமிறக்கி வருகின்றன.

வோக்ஸ்வேகன், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது துணை பிராண்டு மூலம் இந்தியாவில் பங்களிப்பை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பிஎம்டபிள்யூ நிறுவனமும் தனது மினி கார் பிராண்டை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த வரிசையில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் சேர உள்ளது.

நாட்டின் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த சில மாதங்களாக சரிந்து வருகிறது.

எனவே, மார்க்கெட் பங்களிப்பை கூட்டிக்கொள்ளும் விதமாக தனது கியா பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை அருகே கியா பிராண்டின் பிகான்ட்டோ ஹேட்ச்பேக் காரின் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ள தகவல்கள் கசிந்துள்ளன. இந்த புதிய பிகான்ட்டோ கார் புத்தம் புதிய வடிவமைப்பில் அசத்தும் வகையில் இருக்கிறது.

இந்த கார் ஜெனிவா மோட்டோர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ஹூண்டாய் ஐ-10 காரின் எஞ்சினுடன் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய பிகான்ட்டோ கார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய காரின் சோதனை ஓட்டங்கள் சென்னை அருகே நடத்தப்பட்டுள்ளதால் விரைவில் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 28, 2011, 11:42 [IST]
English summary
Hyundai motors planning to launch Kia Brand cars in India. The kia brand picanto car was testing in Chennai outskirts recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+