எல்பிஜியில் செல்லும் இயான், ஐ-10 கார்கள்: ஹூண்டாய் திட்டம்

Hyundai Eon
எல்பிஜி மற்றும் பெட்ரோலில் ஓடும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட இயான் மற்றும் ஐ-10 கார்களை விரைவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீசல் கார்களுக்கு இந்திய சந்தையில் தேவை அதிகரித்துள்ள நிலையில்,ஹூண்டாய் நிறுவனத்தின் இயான், ஐ-10 மற்றும் சான்ட்ரோ உள்ளிட்ட கார்களில் டீசல் மாடல் இல்லை.

இதனால், ஹூண்டாய் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. மேலும், கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் தனது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தையும் ஹூண்டாய் சமீபத்தில் தள்ளிபோட்டுள்ளது.

இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில் எல்பிஜி மற்றும் பெட்ரோலில் செல்லும் இயான் மற்றும் ஐ-10 கார்களை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலைவிட எல்பிஜி விலை குறைவு என்பதால், டீசல் மாடல்கள் இல்லாத குறையை எல்பிஜி மாடல்கள் போக்கும் என்று ஹூண்டாய் நம்புகிறது.

வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியில் இயான், ஐ-10 கார்களின் எல்பிஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 18, 2011, 10:34 [IST]
English summary
Hyundai motors planning to launch LPG cylinder fitted Eon and i10 car models in India soon. This car models expected to display at upcoming 2012 upcoming Delhi Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+