இந்தியாவில் பஸ், டிரக்குகளை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டம்

நாட்டின் கார் உற்பத்தியில் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் காம்பெக்ட் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் உலக அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் ஒருபடியாக இந்தியாவில் பிரிமியம் ரக பஸ் மாடல்கள் மற்றும் டிரக்குகளை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டோக்கியோவில் துவங்கியுள்ள ஆட்டோ கண்காட்சியில் கலந்து கொள்ள வந்த ஹூண்டாய் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஜேடி.லீ இந்த தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"வர்த்தக ரீதியிலான கனரக வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் கனரக வாகனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
விரைவில் இந்தியாவில் கனரக வாகனங்கள் அறிமுகம் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் உயர்தர ரக கனரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏராளமான கனரக மாடல்களை வைத்துள்ளோம். அதில் எந்தெந்த மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது என்று விரைவில் முடிவு எடுக்க உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








