இந்தியாவிலேயே பிரிமியம் கார்களை தயாரிக்க ஹூண்டாய் முடிவு

Hyundai Santa Fe
இறக்குமதி வரியை தவிர்க்க உள்நாட்டிலேயே பிரிமியம் கார்களை உற்பத்தி செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் சிறிய ரக கார் மார்க்கெட்டில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வலுவாக இறுக்கிறது. மேலும், சிறிய கார்களுக்கு 90 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே பெற்று கார் உற்பத்தி செய்து வருகிறது.

ஆனால், பிரிமியம் ரகத்தை சேர்ந்த சான்டா பீ எஸ்யூவி மற்றும் சொனாட்டா செடான் ஆகிய கார்களை தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்து ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பிரிமியம் கார்களுக்கு அதிக இறக்குமதி வரி செலுத்த வேண்டியிருப்பதால், அந்த கார்களின் விலையையும் கூட்டி விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது.

இதை தவிர்க்கும் விதமாக சிறிய கார்கள் போன்று பிரிமியம் கார்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா கூறியதாவது:

"கடந்த ஆகஸ்டு முதல் சான்டா பீ எஸ்யூவியை முழுவதுமாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வருகிறோம். சென்னை ஆலையில் மாதத்திற்கு 225 முதல் 250 சான்டா பீ எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

எதிர்காலத்திலும் உள்நாட்டிலேயே சான்டா பீ எஸ்யூவியை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம்," என்றார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய தலைமுறை சொனாட்டா ட்ரான்ஸ்பார்ம் பிரிமியம் செடான் காரையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 15, 2011, 11:12 [IST]
English summary
Hyundai is mulling over the option of locally manufacturing premium cars in its Indian portfolio. The company is already starting the Santa Fe suv production in Chennai Plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+