அடுத்த ஆண்டுக்குள் 1.5 லட்சம் இயோன் கார்களை விற்க ஹூண்டாய் இலக்கு

Hyundai Eon
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1.5 லட்சம் இயோன் கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாட்டின் கார் உற்பத்தியில் 2வது இடம் வகிக்கும் ஹூண்டாய் நிறுவனம், தனது மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக்கொள்ளும் வகையில் இயோன் என்ற பெயரில் புதிய 800சிசி காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

கடந்த 1ந் தேதி இயோன் காருக்கான புக்கிங்கை ஹூண்டாய் துவங்கியது. இந்த நிலையில், இதுவரை 5,000 இயோன் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாருதி ஸ்ட்ரைக் காரணமாக ஆல்ட்டோ காரின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதும் இயோன் கார் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டில் தனது விற்பனையை 10 சதவீதம் உயர்த்திக்கொள்ள ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த விற்பனை வளர்ச்சி புதிய இயோன் காரை அடிப்படையாக வைத்து இலக்கை அடையவும் ஹூண்டாய் கணக்கு போட்டுள்ளது.

இதற்காக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1.5 லட்சம் இயோன் கார்களை விற்பனை செய்யவும் ஹூண்டாய் இலக்கு வைத்துள்ளது. இதன்மூலம், மொத்த விற்பனையில் நல்ல வளர்ச்சியை பெற முடியும் என்று ஹூண்டாய் நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 20, 2011, 10:40 [IST]
English summary
The second largest car maker, in terms of sales Hyundai motors planning to sell 1.5 lakhs units of Eon cars by end of next year. The brand new 800cc car has launched recently priced at Rs.2.69 lakhs(Ex-showroom price in Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+