டெல்லி கண்காட்சியில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி: ஹூண்டாய் திட்டம்

வரும் ஜனவரி மாதம் டெல்லியில் சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே பெரிய ஆட்டோ கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்காட்சியில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன.
இந்த நிலையில், நாட்டின் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் நிறுவனம் தனது விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய மார்க்கெட்டுக்காக புத்தம் புதிய எஸ்யூவி மாடலை பார்வைக்கு வைக்க உள்ளது.
வரிச்சலுகை பெறும் விதத்தில் இந்த புதிய எஸ்யூவி 4 மீட்டருக்குள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ரகத்துக்குள் கொண்ட எஞ்சின் மாடலுடன் இந்த புதிய எஸ்யூவி பார்வைக்கு வரும் என்று தெரிகிறது.
நமது நாட்டின் எஸ்யூவி மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருவதால் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை பார்வைக்கு வைக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்த புதிய எஸ்யூவி வர்த்தக ரீதியில் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி நிறுவனம் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான எர்டிகா என்ற எம்பிவியையும், மஹிந்திரா மினி ஸைலோவையும் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனமும் புதிய எஸ்யூவியை பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








