அடுத்த ஆண்டு ஜனவரியில் சிறிய கார் அறிமுகம்-ஹூண்டாய்

Hyundai Small Car
சென்னை: அடுத்த ஆண்டு ஜனவரியில் சிறிய காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சிறிய கார்களின் விற்பனை சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட சிறிய கார்கள் இல்லாமல் காலந்தள்ள முடியாது என்பதை கார் நிறுவனங்கள் நன்றாகவே அறிந்து கொண்டுள்ளன.

எனவே, குறைந்த விலை கொண்ட சிறிய கார்களை அறிமுகப்படுத்துவதற்கு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், கார் தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாயும் சிறிய காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியிலோ சிறிய காரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை ஹூண்டாய் தீவிரப்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனைப் பிரிவு மூத்த இயக்குனர் ஒய்.கே.கூ கூறியதாவது:

"சிறிய காரை அறிமுகப்படுத்துவற்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. எங்களது ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பிரிவு வல்லுனர்கள் சிறிய காரை நாட்டின் பல பகுதிகளில் வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் காரை அறிமுகப்படுத்தும் வகையில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த சிறிய கார் மூலம் சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்று நம்புகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, May 16, 2011, 15:30 [IST]
English summary
Hyundai Motor India Ltd (HMIL) has indicated that its compact car, the smallest offering thus far from its stable, is on track for launch in January 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+