இந்த ஆண்டின் சிறந்த கார் ஹூண்டாய் வெர்னா: என்டிடிவி விருது

verna Fluidic
இந்த ஆண்டின் சிறந்த காருக்கான என்டிடிவி விருதை ஹூண்டாய் ஆல் நியூ வெர்னா பெற்றுள்ளது.

பிரபல ஆங்கில செய்திச் சேனலான என்டிடிவி ஆண்டுதோறும் ஆட்டோமொபைல் துறைக்கான விருதுகளை வழங்கி வருகிறது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த கார்கள் மற்றும் பைக்குகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆட்டோமொபைல் வல்லுனர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்கள், நேயர்களுக்கும் பங்குபெற்று சிறந்த கார்கள் மற்றும் பைக்குகளை தேர்வு செய்கின்றனர். அதன் அடிப்படையில் இந்த விருதுகள் வழக்கப்படுகின்றன.

இந்த நிலையில். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது.

இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த காருக்கான விருதை ஹூண்டாய் வெர்னா பெற்றுள்ளது.

சிறந்த வடிவமைப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வெர்னாவுக்கு விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா கூறியதாவது;

"வெர்னாவின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் பெற்றுள்ள மதிப்பே அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். இந்த மதிப்புமிக்க விருதை பெறுவதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார்.

புளுயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள வெர்னா வாடிக்கையாளர்களின் மனதை வெகுவாகவே கொள்ளை கொண்டுள்ளது.

கடந்த மேமாதம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் இதுவரை 34,000 ஆல் நியூ வெர்னா கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2011, 9:28 [IST]
English summary
Hyundai New verna has received the NDTV Car of the year award. The verna has selected 3 categories of the award.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+