ரூ.45 கோடி முதலீட்டில் உதிரிபாக தொழிற்சாலை: ஹூண்டாய் அறிவிப்பு

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.
இதில், ஹூண்டாய் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் அதிக முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிக முதலீடுகளை செய்யும் வெளிநாட்டு நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சென்னைக்கு அருகில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும்,ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து,கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் 'டபிள்யூ ஐ ஏ' நிறுவனம் இந்தியாவில் இரண்டு உதிரிபாக தொழிற்சாலைகளை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ரூ.45 கோடி முதலீட்டில்,அமைக்கப்பட உள்ள இந்த தொழிற்சாலைகள் சென்னைக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது. இதற்கடுத்து, தமிழகம் அல்லது ஆந்திராவில் மற்றொரு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் கனரக இயந்திரங்கள் மற்றும் அதற்கான டூல்ஸ் தயாரிப்பு, வடிவமைப்பு ஆகிய பணிகள் புதிய தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும். இந்த தொழிற்சாலைகள் மூலம், நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்று, ஹூண்டாய் 'டபிள்யூ ஐ ஏ' தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications