"பழைய மாடல் ஸ்விப்ட் வாங்கிக்கொள்ளுங்கள்" - மாருதி டீலர் அட்வைஸ்

Maruti Swift
புதிய ஸ்விப்ட் வாங்க முடியாமல் வருந்தும் வாடிக்கையாளர்களுக்கு, தங்களிடம் ஸ்டாக் இருக்கும் பழைய மாடல் ஸ்விப்ட் காரை வாங்கிச் செல்லுமாறு பரிந்துரைத்து வருவதாக பெயர் கூற விரும்பாத மாருதி டீலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் கார் புக்கிங்கில் அசத்தியது. 90,000 கார்கள் வரை புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் கார் உற்பத்தி செய்யப்படும் மானேசரிலுள்ள மாருதி ஆலையில் தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் காரணமாக புதிய ஸ்விப்ட் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஸ்விப்ட் காரை டெலிவிரி செய்ய முடியாத நிலையில் மாருதி உள்ளது. மேலும், ஸ்விப்ட் காரின் புக்கிங் செய்து காத்திருக்கும் காலம் 8 மாதங்கள் வரை நீண்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் வாங்க முடியாமல் வருந்தும் வாடிக்கையாளர்களை பழைய மாடல் ஸ்விப்ட் காரை வாங்கிக்கொள்ளுமாறு பரிந்துரைத்து வருவதாக மாருதி டீலர் ஒருவர் தெரிவித்தார்.

பழைய ஸ்விப்ட் காரை விட புதிய ஸ்விப்ட் காரின் வடிவமைப்பு மற்றும் வசதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், பழைய மற்றும் புதிய ஸ்விப்ட் கார்களில் ஒரே எஞ்சின்தான் என்பதால், பழைய காரை வாங்கிக்கொள்ளுமாறு பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.

புதிய ஸ்விப்ட் அறிமுகம் செய்யப்பட்டதால் டீலர்களில் ஏராளமான பழைய ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகாமல் தங்கி விட்டன. இதனால், டீலர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர். இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் கார் டெலிவிரி தாமதம் ஆவதை காரணம் காட்டி இருப்பு உள்ள பழைய மாடல் ஸ்விப்ட் கார்களை விற்பனை செய்யும் முயற்சிகளை சில டீலர்கள் துவங்கியுள்ளனர்.

மேலும், இருப்பு உள்ள பழைய ஸ்விப்ட் கார்களை உடனடியாக டெலிவிரி எடுத்துக்கொள்ளலாம் என்றும் வாடிக்கையாளர்களிடம் கூறுவதாகவும் அந்த டீலர் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Monday, September 19, 2011, 12:39 [IST]
English summary
Maruti Suzuki dealers who were not able to sell all their inventory of the old swift before the launch of the new swift were a worried lot. But the strike at Manesar and the resultant long waiting period for the new car has come as a blessing in disguise to these dealers. A Maruti Suzuki dealer who did not wished to be named has said they were now suggesting people who wanted to buy the new Swift to opt for the old model.The dealer said: “There might be several cosmetic and design changes in the new swift when compared with the previous model. But the engine remains the same. Further, the old swift is available off the counter and there is no waiting period. The price of the old Swift is also lower than the current model and it will retain its resale value despite the launch of the new model. “
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+