இந்த நிதியாண்டில் ரூ.1,200 கோடி முதலீடு: அசோக் லேலண்ட் அறிவிப்பு

இந்த முதலீட்டில் ரூ.500 கோடி நிசான் நிறுவனம் மற்றும் ஆஸ்திரேலிய வாகன தயாரிப்பு நிறுவனத்துடனான கூட்டுக் குழுமங்களின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தவிர, ரூ.400 கோடியை தனது புதிய நெப்டியூன் எஞ்சின் தயாரிப்பு பணிகளுக்கு லேலண்ட் பயன்படுத்துகிறது. மீதம் உள்ள ரூ.300 கோடியை உத்தராகாண்டில் உள்ள பாந்த்நகர் தொழிற்சாலையின் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நிதியாண்டில் வர்த்தக மதிப்பு முதன்முறையாக ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீதரன் தெரிவித்தார். 2009-10 நிதியாண்டில் ரூ.7,244 கோடியாக இருந்த வர்த்தக மதிப்பு, கடந்த நிதியாண்டில் ரூ.11,117 கோடியாக உயர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், அதிக செயல்திறன் மற்றும் மைலேஜ் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் நெப்டியூன் எஞ்சின் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் ஸ்ரீதரன் கூறினார்.


Click it and Unblock the Notifications








