சொக்க வைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஹெலிகாப்டர் இன்டிரியர் டிசைன்

EuroCopter Interior
ஜெனிவா: சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம், முதன்முறையாக ஹெலிகாப்டரின் உட்புறத்தை சொகுசாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளது. ஹெலிகாப்டர் தயாரிப்பில் புகழ்பெற்ற யூரோகாப்டர் நிறுவனத்தின் இசி-145 மாடல் ஹெலிகாப்டரின் உட்புறத்தில் தனது கைவண்ணத்தை காட்டி பிரமிக்க வைத்துள்ளது மெர்சிடிஸ்.

ஐரோப்பிய விமான வர்த்தக மாநாடு மற்றும் ஜெனிவா கண்காட்சியில் இந்த ஹெலிகாப்டரை காட்சிக்கு நிறுத்தியிருந்தது மெர்சிடிஸ் பென்ஸ். ஹெலிகாப்டருக்குள் ஏறி உள்ளே நுழைந்து பார்த்த அனைவரும் ஒரு கணம் திகைத்து மனதை பறிகொடுத்தனர் என்றால் மிகையில்லை.

இத்தாலியிலுள்ள மெர்சிடிசின் அதிநவீன வடிவமைப்பு கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டரின் உட்புறத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் மெர்சிடிசின் வடிவமைப்பு நிபுணர்களின் கைவண்ணம் பளிச்சிடுகிறது.

பயணத்தின்போது என்னென்ன வசதிகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அத்துனை வசதிகளுடன், மனதிற்கு ரம்மியமான பயண சூழலை ஏற்படுத்தும் வகையிலான இருக்கைகள், மரவேலைப்பாடுகளுடன் அடங்கிய உட்புற கூரை என அசத்துகிறது ஹெலிகாப்டரின் உட்புற வடிவமைப்பு.

முதன்முறையாக ஹெலிகாப்டரின் உட்புற வடிவமைப்பில் இறங்கி அசத்தியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் அடுத்தடுத்து காப்புரிமையுடன் புதிய டிசைன்களை வடிவமைத்து அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 29, 2011, 12:34 [IST]
English summary
Mercedes Benz has always been known for the luxurious interiors of their cars. M-B has done the cabin for EC145 – a favourite flying copter for all businessmen. Gorden Wagener from Mercedes-Benz Advanced Design Studio on Italy’s Lake Como designed this one of a kind flying luxury and has managed to get the top notch Mercedes feel packed in this copter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+