பட்ஜெட் பயம்: பிப்ரவரியிலும் கார் விற்பனை அமோகம்

இந்த புத்தாண்டு கார் நிறுவனங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் மொத்த கார் விற்பனை 31 சதவீதம் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதமும் கார் விற்பனை நல்ல வளர்ச்சியை எட்டியது.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த மாதம் 1,89,008 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதை கடந்த ஆண்டு பிப்ரவரி விற்பனையுடன் (1,54,132) ஒப்பிடும்போது 22.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று, மோட்டார்சைக்கிள்கள் விற்பனையும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த மாதம் உள்நாட்டு சந்தையில் 7,76,051 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையுடன் (6,42,419 மோட்டார்சைக்கிள்கள்) ஒப்பிடும்போது 20.8 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. உள்நாடு மற்றும் ஏற்றுமதியை உள்ளடக்கிய மோட்டார்சைக்கிள் மொத்த விற்பனையும் உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் மோட்டார்சைக்கிள்கள் மொத்த விற்பனை 10,22,272 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மோட்டார்சைக்கிள் விற்பனை 8,37,653 ஆக பதிவானது. இதை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மோட்டார்சைக்கிள் மொத்த விற்பனை 22.04 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.
மேலும்,கடந்த பிப்ரவரி மாதம் மொத்த வாகன விற்பனை 21.32 சதவீதம் உயர்வை கண்டது. பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் கார் விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








