மெர்சிடிஸ் பென்சின் இரண்டு புதிய கார்கள் அறிமுகம்

Mercedes Benz
டெல்லி: ஜெர்மனியை சேர்ந்த பிரிமியம் சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எஸ்எல்350 மற்றும் ஜிஎல்500 என்ற இரண்டு புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார் ரகத்தில் வந்துள்ள எஸ்எல் 350யில் 3498 சிசி திறன்கெண்ட வி6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 315 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல்கொண்ட, இந்த எஞ்சின் 360என்எம் டார்க்கை கொடுக்கிறது.

இதேபோன்று , ஜிஎல் 500 எஸ்யூவீ காரில் 5.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 388 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.

புதிய கார்களை அறிமுகம் செய்துவைத்து பேசிய பென்ஸ் சி.இ.ஓ. பீட்டர் ஹோனேக் கூறியதாவது:

"பிரிமியம் கார் விரும்பிகளை புதிய மாடல்கள் வெகுவாக கவரும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைந்த விலை கொண்ட ஏ மற்றும் பி ரக கார்கள் அறிமுகப்படுத்தப்படும். எங்களது சிறிய கார்கள் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மேலும், சிறிய கார்கள் மூலம் இந்திய சந்தையில் குறிப்பிட்ட இடத்தை தக்கவைக்க முடியும் என்று கருதுகிறோம். ஏ சீரிஸ் கான்செப்ட் கார் மாடல் வரும் ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஆட்டோ ஷோவில் இடம்பெறும்," என்றார்.

எஸ்எல் ஸ்போர்ட்ஸ் கார் டெல்லியில் ரூ.98.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜிஎல் 500 எஸ்.யூ.வீ. கார் ரூ.80.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 5, 2011, 9:57 [IST]
English summary
Mercedes-Benz, the German luxury car producer has launched two of its premium products SL 350 and GL 500 in India which are priced at Rs 98.5 lakh and Rs 80.9 lakh (ex-showroom Delhi) respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+