"அடுத்த 10 ஆண்டில் ஆட்டோ சந்தைக்கு 2.5 லட்சம் கோடி கிட்டும்"

ஆசியாவில் மட்டுமல்லாது உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோ சந்தையாக இந்தியா மாறி உள்ளது. இதனால், வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனங்கள் இந்தி்ய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றன.
மேலும், இந்தியாவில் நீண்ட கால அடிப்படையில் கணிசமான முதலீடுகளையும் அந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய ஆட்டோ சந்தை 2.5 லட்சம் கோடி முதலீட்டை பெறும் என்று மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
" இந்திய ஆட்டோமொபைல் சந்தை வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதனால், உலகின் முன்னணி ஆட்டோ நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
தற்போது நம் நாட்டில் ஆண்டுக்கு 25 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது வரும் 2020ம் ஆண்டில்1 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை 2.5 லட்சம் கோடி முதலீட்டை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம், ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








